தாம்பரம் மாநகர இளைஞரணி சார்பில் பொங்கல் விழாவையொட்டி மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகர இளைஞரணி சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் சமத்துவ பொங்கல் விழா இரும்புலியூர் பகுதியில் தாம்பரம் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ் சர்தார் ஏற்பாட்டில் 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ் தலைமையில் மூன்று நாட்கள் மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ பங்கேற்று கோல போட்டியில் வெற்றி பெற்ற முதல் ஐந்து பேருக்கு பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி, கிரைண்டர், மிக்ஸி, பட்டுப் புடவை மற்றும் 700 பேருக்கு பட்டுப் புடவையுடன் தட்டு ஆகியவற்றை வழங்கினார் உடன் பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் எஸ்.சேகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் கோல்டு டி.பிரகாஷ், தலைமை கழக பேச்சாளர்கள் எஸ்.ஜி.கருணாகரன், வேலுமணி, திமுக நிர்வாகிகள் சஞ்சீவி, ரத்தினகுமார், பாபு, பட்டு ராஜா, சிவக்குமார், விக்கி என்கின்ற யுவராஜ், தேவராஜ், மாநகர இளைஞர் துணி துணை அமைப்பாளர்கள் கார்த்திக், சிவசுப்பிரமணியம், இன்சமாம், மற்றும் இலக்கியா செல்வி ராஜேஷ், பகுதி கழக நிர்வாகிகள் வட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
No comments