• Breaking News

    ராணிப்பேட்டை அருகே பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்ட தமிழரசன் கொலைக்கு நீதி வேண்டும்..... பாராமுகத்தில் அரசும் - காவல்துறையும்..... பா.மு.க.குற்றச்சாட்டு

     


    யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள நெல்வாய் கிராமத்தினை  சேர்ந்தவர்கள் சூர்யா என்ற தமிழரசன்,இவரது நண்பர்  விஜயகணபதி ஆகிய இருவரையும் கடந்த 16 ம் தேதி திருமால்பூரில் அதே ஊரை சேர்ந்த பிரேம்,மணிகண்டன் ,கோபி,வெங்கடேசன் இன்னும் சிலரும் ஒன்று சேர்ந்து வந்து தமிழரசனையும் ,விஜய கணபதியையும் சாதிப்பெயரை  சொல்லி திட்டி பெட்ரோரை ஊற்றி கொளுத்தியுள்ளனர்.

    இதில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த தமிழரசன் யாதவ் இன்று மாலை இறந்துவிட்டார்.ஆனால்,பெட்ரோலை ஊற்றி கொளுத்திய குற்றவாளிகளில் முக்கியமானவர்கள் வெளியில் சுற்றிக் கொண்டுள்ளனராம்.

    குற்றவாளிகள் அனைவரையும்  குண்டர் சட்டத்தில் கைது செய்யச் சொல்லி யாதவ அமைப்புகள் வலியுறுத்தியும் அதற்கான நடவடிக்கை இல்லை அமைதியான யாதவ சமுதாயம் மீண்டும் ஒரு போராளியை இழந்துள்ளது.

    சில ஜாதியினர் கொல்லப்பட்டால் எதிராளிகள் மீது எண் கவுண்டர் போன்ற நடவடிக்கையில்  காவல்துறையும் அரசும் ஈடுபடுகிறது.அரசியல் பின்புலம் கொண்ட  ரவுடிகளால் அமைதியாக இருக்கும் மற்றும் மேம்பட்ட  ஜாதியினர் கொல்லப்பட்டாலும் தீவிர நடவக்கை ஏதும் எடுக்காமல்  பாராமுகமாக கைது நடவடிக்கையை மட்டும் காவல்துறையும் அரசும் மேற்கொள்வது வேதனையாக உள்ளது.

    அமைதியான,அப்பாவியான சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படும் போதும் தமிழக அரசும் ,காவல்துறையும் சாதிய கொலைகளுக்கு பாகுபாடற்ற முறையில் முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட  முன் வேண்டும்.எவ்ளோ பெரிய,பெரிய ரவுடிகளையும் ,கொலையாளிகளையும் என்கவுண்டரில் போட்டு பல பிரச்சினைகளை கட்டுப்படுத்திய காவல்துறையினர் தற்போது அமைதியாக இருப்பதை பார்க்கும்போது அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளதாகவே தெரிகின்றது.

    இனியும் காவல்துறையிரை நேர்மையாக செயல்பட விடாமல் அரசு கட்டுப்படுத்தினால் தமிழகம் கொலைக்களமாக மாறிவிடும் என்ற அச்சம் ஏற்படுள்ளது மட்டுமின்றி அரசியல் காரணத்துக்காக தமிழக அரசு ஒரு சாரருக்கு  சாதகமாக செயல்பட்டு ரவுடிகள் மீதும் கொலையாளிகள் மீதும் மட்டும் கடும் நடவடிக்கை எடுக்கின்றது என்ற தவறான இமேஜூம் அரசுக்கு வந்துவிடும் என்பதை தெரிவிக்கின்றோம்.

    தமிழக அரசும் காவல்துறையும் இனியும் தயங்காது தமிழரசன் யாதவ் சாவுக்கு நீதி கிடைக்கவும்,அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவும் உடனே முன்வர வேண்டும்.இவ்வாறு தமது அறிக்கையில் பாரதராஜா யாதவ் கூறியுள்ளார்.

    No comments