• Breaking News

    வாக்கு சேகரித்த அமைச்சர் முத்துசாமியிடம் கேள்வி எழுப்பிய ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்

     


    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் பரப்புரை செல்லும் அமைச்சர் முத்துசாமியிடம் மக்கள் குறைகளை கூறிவரும் நிலையில், பாரதி நகரில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழியில்லை என பொதுமக்கள் முறையிட்டனர்.உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியபோது அருகாமையில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால், ஆத்திரமடைந்த அமைச்சர் கோபத்துடன் சத்தமிட்டார்.

    இதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட அமைச்சர் முத்துசாமியிடம், தனது பேரனை ஏன் தூக்காமல் செல்கிறீர்கள் என ஒரு பெண் கேள்வி எழுப்பினார். உடனே, குழந்தை தூக்கி சிரித்தபடி அமைச்சர் அங்கிருந்து சென்றார்.

    No comments