உண்டியலில் விழுந்த ஐ போன் இன்று உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும்..... அமைச்சர் சேகர்பாபு தகவல்

 


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் பகுதியில் கந்தசாமி கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் தினேஷ் என்பவர் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அவர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த நிலையில் பின்னர் உண்டியலில் காணிக்கை செலுத்தினார். அப்போது ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள அவருடைய ஐபோன் தவறுதலாக உண்டியலில் விழுந்துவிட்டது. இதனால் பதறிப்போன தினேஷ் கோவில் நிர்வாகத்திடம் தன்னுடைய iphone தவறுதலாக விழுந்துவிட்டது அதனை எடுத்து தாருங்கள் என்று கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் உண்டியலில் விழுந்தது முருகனுக்கு தான் சொந்தம் iphone-ஐ திரும்ப தர முடியாது என்று கூறிவிட்டனர். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் உண்டியல் திறந்து எண்ணபட்டது.‌ அப்போது தினேஷ் உண்டியல் திறக்கப்பட்டதால் தன்னுடைய ஐபோனை தந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் மீண்டும் சென்று அவர் கேட்க கோவில் நிர்வாகம் போனை திரும்ப கொடுக்க மறுத்து விட்டது. அவர்கள் முருகனுக்கு தான் ஐபோன் சொந்தம் என்று கூறியதால் அறநிலையத்துறையிடம் தினேஷ் மனு கொடுத்தார்.

இது தொடர்பாக கடந்த மாதம் அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அவருடைய செல்போனை மீண்டும் ஒப்படைப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து முடிவு செய்யப்படும் என்று கூறினார். இந்நிலையில் தற்போது அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திருப்போரூர் முருகன் கோவிலில் விழுந்த ஐபோன் மீண்டும் சம்பந்தப்பட்ட நபரிடம் இன்று ஒப்படைக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் இதனால் தினேஷிடம்  அவருடைய ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐபோன் கொடுக்கப்பட உள்ளது.

Post a Comment

0 Comments