• Breaking News

    முல்லைப் பெரியார் பாதுகாப்பு குழுவில் இணைந்துள்ள இரண்டு கேரளா அதிகாரிகளை நீக்க கோரி தமிழக கேரள எல்லையில் விவசாய சங்கத்தினர் முற்றுகை ஆர்ப்பாட்டம்

     


    தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியார் அணை பாதுகாப்பு குறித்து மத்திய அரசின் சார்பாக முல்லை பெரியார் பாதுகாப்பு குழு 7  பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில் கேரளாவை கேரளாவைச் சேர்ந்த விஸ்வாஸ் மற்றும் தலைமை பொறியாளர் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் கேரளா அதிகாரிகள் இருவர் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழுவில் இணைந்துள்ளதை கண்டித்து அவர்களை நீக்கக்கோரி பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தினர் மற்றும் நில வணிகர் சங்கத்தினர் தேனி மாவட்டம் தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள கூடலூர் லோயர் கேம்பில் எல்லையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த முற்றுகை ஆர்ப்பாட்டம் பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

    தமிழ் கேரளா எல்லையில் அமைந்துள்ள லோயர் கேம்பில் இருந்து நடை பயணமாக குமுளிக்கு செல்ல இருந்தவிவசாய சங்கத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் லோயர் கேம்பிலேயே சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த முற்றுகை ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினரின் வேண்டுகோளை அடுத்து விவசாய சங்கத்தினர் கலைந்து சென்றனர்.ஒரு மணி நேரம் நடைபெற்ற முற்றுகை ஆர்ப்பாட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில் கேரள அதிகாரிகளை முல்லைப் பெரியார் பாதுகாப்பு குழுவில் இருந்து நீக்காவிட்டால் தமிழக கேரளா எல்லையான குமுழிகள் பெரும் போராட்டம் நடத்துவோம் என கூறினார். மேலும் பேபி அணையில் பராமரிப்பு பணிக்கு இடையூறாக உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு நீர்வள ஆணையம் உத்தர வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    No comments