கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவராக தட்சணா மூர்த்தி தேர்வு செய்து அறிவிக்கப்பட்டார்.
கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பா.ஜ.க. அலுவலகத்தில் புதிய ஒன்றிய தலைவர் அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜேஷ்ராஜா தலைமை வகித்து, ஏற்கனவே நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட தட்சணாமூர்த்தியை புதிய ஒன்றிய தலைவராக அறிவித்தார்.
இதில் ஒன்றிய தேர்தல் அதிகாரி பாலமுருகன், தீவிர உறுப்பினர் பொறுப்பாளர் அன்புராஜ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் அருள்செல்வன், மற்றும் பாலகுரு ஒன்றிய தலைவர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments