• Breaking News

    காசா போர் நிறுத்தம்..... ஓராண்டுக்குப் பிறகு விடுவிக்கப்படது இஸ்ரேலின் வணிகக் கப்பல்

     


    காசாவில் ஹமாஸ் படையினரை எதிர்த்து இஸ்ரேல் ராணுவம் ஒன்றரை ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரான் ஆதரவு படைகளான ஹிஸ்புல்லா அமைப்பினர் செங்கடலிலும், ஹவுதி படையினர் ஏமன் வளைகுடா கடல் பகுதியிலும் இஸ்ரேலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

     அந்த கடல் வழியாக வந்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியும், சிறைபிடித்தும் வந்தனர்.அந்த வகையில், கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி கேலக்ஷி லீடர் எனும் வணிகக் கப்பலை ஹவுதி படையினர் சிறை பிடித்தனர். அதில் இருந்த பல்கேரியா, உக்ரைன், ரோமன், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 25 பேர் கொண்ட குழுவினர் சிறைபிடிக்கப்பட்டனர்.

    தற்போது, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் கையெழுத்தாகிய நிலையில், கேலக்ஷி லீடர் கப்பலை விடுவிப்பதாக ஹவுதி படையினர் அறிவித்துள்ளனர்.

    இது குறித்து ஹவுதி சுப்ரீம் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறோம். காசா போரின் போது கடந்த 2023ம் ஆண்டு சிறைபிடிக்கப்பட்ட கேலக்ஷி லீடர் குழுவினர் விடுவிக்கப்படுகின்றனர்',எனக் கூறப்பட்டுள்ளது.

    No comments