மதுரையில் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் இன்று பாலமேடு பகுதியில் காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏராளமான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது தற்போது அங்குள்ளவர்கள் Save அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியுள்ளனர்.
அதாவது மதுரையில் உள்ள மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 5000 கிலோமீட்டர் பரப்பளவில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மதுரை மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் மாநில அரசு கண்டிப்பாக சுரங்கம் வராது என்று உறுதி கொடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக மத்திய அரசும் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ள நிலையில் தற்போது இந்த வாசகம் ஜல்லிக்கட்டு போட்டியில் வைக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
0 Comments