பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட்
நவீன மருத்துவத்தை இழிவு படுத்தி விளம்பரம் வெளியிட்டதாக பாபா ராம்தேவ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெற்றது.
இதில் நீதிபதி அவரை நேரில் ஆஜராக ஆணையிட்டும், அவர் வராததால் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஏற்கனவே இது தொடர்பான வழக்கில் பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டதால் உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
No comments