சிவகிரியில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்ட பொம்மன் பிறந்தநாள் விழா


சிவகிரியில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பாக சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 பிறந்தநாள் விழாவை  முன்னிட்டு அவரின் திருவுருவப்படத்திற்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தார்கள் தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார்கள். பொதுமக்களுக்கு கேசரி,அன்னதானம் வழங்கினார்கள்.

 சிவகிரி கோவிந்தன் கோவில் தெரு மற்றும் கட்டபொம்மன் தெரு சார்ந்த தொட்டி நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெண்கள் ஆண்கள் ஊர்வலமாக வந்து கோவிந்தன் தெருவில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவப்படத்திற்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினார்கள் கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் கொடியினை நாட்டாமை கந்தசாமி ஏற்றி வைத்தார்  அன்னதான வழங்கப்பட்டது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை நாட்டாமை கந்தசாமி செயலாளர் மார்க்சிஸ்ட் மாரியப்பன் பொருளாளர் செல்வகுமார் பூசாரி வேலுச்சாமி குழு அமைப்பாளர்கள் பெருமாள் கிருஷ்ணசாமி   மகேஷ் நீராதி லிங்கம் கட்டபொம்மன் கிருஷ்ணசாமி  உட்பட விழா குழுவினர்கள் செய்தனர்.

  சிவகிரி பகுதியில் சிவகிரி தேவிபட்டணம் ராயகிரி அருளாட்சி வாசுதேவநல்லூர் மருதநாட்சியார்புரம் ஆகிய பகுதியில் உள்ள தொட்டி நாயக்கர் சமுதாயத்தினர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 வது பிறந்த நாளை கொண்டாடினார்கள்  படம் சிவகிரி கோவிந்தன் கோவில் தெருவில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு அவரின் திருவுறுபடத்திற்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

Post a Comment

0 Comments