• Breaking News

    மதுரை எம்பி சு.வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி

     


    மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. சு. வெங்கடேசன். இவர் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில மாநாட்டில் கலந்து கொண்டார். நேற்று இவர் மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விழுப்புரம் வந்த நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

    இதன் காரணமாக வெங்கடேசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மாவட்ட ஆட்சியர் பழனி மற்றும் கூடுதல் ஆட்சியில் ‌ ஸ்ருதன் ஜெய் ஆகியோர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளனர். மேலும் அவர் இன்று மாலை சிகிச்சை முடிவடைந்து  வீட்டிற்கு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    No comments