கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மையம் மற்றும் இந்தியன் யோகா அசோசியேஷனின் தமிழ்நாடு பிரிவு இணைந்து, புத்தாண்டு தினத்தை ஒட்டி யோகா உலக சாதனை நிகழ்வை நடத்தினர். கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தலைமையில் நடந்த இந்த உலக யோகா சாதனை நிகழ்விற்கு மதன்லால் கெமானி விவேகானந்தா வித்யாலயா பள்ளி முதல்வர் ஜெகதாம்பிகா, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி முதல்வர் திலகா, சூரியநாராயணன், ஓய்வு பெற்ற அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் புஷ்பலதா சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தில் நடைபெற்ற இந்த உலக சாதனை நிகழ்வின் போது, ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மையம் மற்றும் ஆராய்ச்சி யோகா மைய நிறுவனர் மற்றும் பயிற்சியாளரான சந்தியா மேற்பார்வையில், ஒரே நேரத்தில், 105 யோகா மாணவர்கள், தொடர்ந்து, 10 நிமிடங்கள் அர்த்த மச்சேந்திர ஆசனத்தில் நின்று உலக சாதனை படைத்தனர்.
இவர்களது உலக சாதனை ‛வேல்ட்வைட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்தது.தொடர்ந்து சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கும், பயிற்சி மையத்திற்கும் பதக்கம் மற்றும் உலக சாதனைக்கான பட்டயங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் செந்தமிழ் விஜயன் வரவேற்றார். பின்னர் சாதனை மாணவர்களுக்கு உலக சாதனை புத்தகத்தின் தீர்ப்பாளர் சிந்துஜா வினித் பத்க்கம் மற்றும் சாதனை சான்றிதழை வழங்கினர். தொடர்ந்து கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட யோகா மாணவர்கள் யோகா நடனம் உள்ளிட்ட யோகா நிகழ்ச்சிகளை மாணவர்கள் செய்து காட்டி பொதுமக்களை உற்சாகப்படுத்தினர். விழா முடிவில் பி.திருசிவபூரணி நன்றி கூறினார்.
0 Comments