தமிழ் அறிஞரும் பேராசிரியருமான சாலமன் பாப்பையா ஒரு சிறந்த பட்டிமன்ற பேச்சாளர். இவர் ஏராளமான பட்டிமன்றங்களில் நடுவராக கலந்து கொண்டுள்ளார். அதன் பிறகு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரம் மிகவும் பிரபலம்.இவருடைய மனைவி ஜெயபாய். இவருக்கு 86 வயது ஆகும் நிலையில் மதுரையில் உள்ள அவருடைய இல்லத்தில் உடல் நலக்குறைவினால் காலமானார். மேலும் அவருடைய மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
0 Comments