புதுக்கோட்டை மாவட்டம்,"கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறக்கூடிய பகுதிகளுக்கு வருகின்ற (8 ம் தேதி) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றும், இது கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது" என்றும்,
இதேபோன்று அறந்தாங்கி ராஜேந்திரபுரம், அழியாநிலை, மறமடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறக்கூடிய பகுதிகளுக்கு 9 ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றும், இது கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது" என்றும் அறந்தாங்கி மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
0 Comments