உத்திரபிரதேச மாநிலத்தில் பைரேலி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு மின் வினியோகம் ஒரு டிரான்ஸ்பார்மர் மூலமாக விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சில மர்ம நபர்கள் அந்த டிரான்ஸ்பார்மரையே திருடிவிட்டு சென்றுவிட்டனர். ஒரு டிரான்ஸ்பார்மர் ஒட்டுமொத்த கிராமத்திற்கும் மின் வினியோகம் செய்த நிலையில் 240 கிலோ வாட்ஸ் கொண்ட அதனை கடந்த மாதம் 14ஆம் தேதி திருடிவிட்டனர்.
அதனை முழுமையாக வெட்டி எடுத்து திருடிய நிலையில் ஒட்டுமொத்த கிராமமும் அதிலிருந்து இருளில் மூழ்கியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மின்சாரம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் மின்துறையினர் உதவி இன்றி இந்த திருட்டு நடந்திருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments