• Breaking News

    எம்.பி.கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை

     


    வேலூர் மாவட்டம் கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளார். 3 கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடைபெறுகிறது. அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து, திமுக வழக்கறிஞர்கள் கல்லூரிக்கு வருகை தந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    No comments