கீழையூர் அருகே தனியார் கல்லூரியில் மகளிர் திட்டம் சார்பில் கல்லூரி சந்தை என்ற கண்காட்சியினை திட்ட இயக்குனர் ரூபன்ராஜ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்


நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே உள்ள ஈசனூரில் செயல்பட்டு வரும் ஆரிஃபா தொழில்நுட்ப  பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களின் ''கல்லூரி சந்தை'' என்ற திட்டத்தில் மூன்று நாட்கள் நடைபெறும்  கண்காட்சியினை கல்லூரி சேர்மன் சுல்தான்நூல் ஆரிஃபின், மகளிர் திட்ட இயக்குனர் ரூபன்ராஜ் ஆகியோர்  குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.


இந்த கண்காட்சியில்  சின்னாளப்பட்டி சேலைகள்,ஈரோடு மஞ்சள், பவானி ஜமுக்காளம்,சிறுதானிய உணவு பொருட்கள்,ஆர்கானிக் காய்கறிகள், தேன், பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏராளமான பொருட்கள் வைக்கப்பட்டது.இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு பொருட்களை வாங்கி சென்றனர்.


இந்நிகழ்ச்சியில்  கல்லூரி முதல்வர்  கிப்சன் சாமூவேல்,உதவி திட்ட அலுவலர்கள் சந்திரசேகரன், சண்முகவடிவேல், சரவணன், மாவட்ட வள பயிற்றுனர்கள் ஸ்ரீரங்கபாணி, சுகந்தி மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் பங்கேற்றனர்.


மக்கள் நேரம் எடிட்டர் மற்றும் நாகை மாவட்ட நிருபர் ஜி.சக்கரவர்த்தி

Post a Comment

0 Comments