மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சில தொழிலாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், மாஞ்சோலை எஸ்டேட்டில் வசிக்கும் 700 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி, வீடு கட்ட உதவ வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும், குழந்தைகளுக்கு இலவச உயர்கல்வி வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மாற்றுப்பணி வழங்கும் வரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளனர்.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மறுவாழ்வு திட்டம் தொடர்பாக கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
0 Comments