• Breaking News

    அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வுப் போட்டிகள் நடைபெற்றது


    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் கல்லூரி முதல்வர்(பொறுப்பு ) சண்முகசுந்தரம் வழிகாட்டுதல்படி நடந்தது.

    "போதைப்பொருட்கள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு" எனும் பொதுத் தலைப்பில் நடைபெற்ற இப்போட்டிகளில் 25 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பலரும் பங்கேற்றனர். இப்போட்டிகளுக்கு நடுவர்களாக கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் காளிதாஸ், வணிக நிருவாகவியல் துறைத்தலைவர் அன்பழகன், கணிதவியல் துறைத்தலைவர் கிளாடிஸ், தமிழ்த்துறை விரிவுரையாளர்கள் ராஜலட்சுமி, வனிதா, ஆங்கிலத்துறை விரிவுரையாளர் சிவராஜன், வேதியியல் துறை விரிவுரையாளர் சிற்றரசு ஆகியோர் பணியாற்றினர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்  பழனித்துரை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஒருங்கிணைத்திருந்தனர்.

    No comments