• Breaking News

    பெத்தநாடார்பட்டியில் திமுக பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம்


    பெத்தநாடார்பட்டியில் நடைபெற்ற திமுக பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன் கலந்து கொண்டார்.

    கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம், பெத்தநாடார்பட்டியில் திமுக பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் என்.எல்.சிவன்பாண்டியன் தலைமை வகித்தார். ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன் கலந்து கொண்டு, ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

    கூட்டத்தில் தொகுதி ஒருங்கிணைப்பாளர் பொன்செல்வன்,  ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி கலைச்செல்வன், துணைத்தலைவர் ஜெயராணி அந்தோணிராஜ்,  மாவட்ட பிரதிநிதிகள் முத்துராஜ், பாண்டியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோமு, நிர்வாகிகள் சுதா தியாகராஜன்,சேர்மலிங்கம், காசிபாண்டி, பரமசிவன் மற்றும் பாகமுகவர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் அன்பரசு நன்றி கூறினார்.

    No comments