• Breaking News

    நடிகை சமந்தாவுக்கு சிக்கன்குனியா..... ரசிகர்கள் ஆறுதல்

     


    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் நிலையில் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடர் வெளியானது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் சமந்தா. அவர் மயோசிடிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து படிப்படியாக மீண்டு வந்த நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

    தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கிய சமந்தா படங்களை தயாரிக்கவும் இருக்கிறார். இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது இன்ஸ்டாகிராமில் சிக்கன் குனியாவால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். இதனால் அவருக்கு ஏற்பட்ட மூட்டு வலியிலிருந்து மீள்வதற்கு அவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தையும் பகிர்ந்து உள்ளார். மேலும் இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் விரைவில் சமந்தா குணமடைய வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

    No comments