லீக் ஆன கள்ளக்காதல்..... தோட்டத்தில் சடலமாக கிடந்த ஜோடி

 


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே மைக்கேல் பாளையம் பகுதியில் ஒருவரின் தனியார் தோட்டத்தில் ஒரு இளம் பெண்ணும், வாலிபரும் சடலமாக கிடந்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அறிந்த பாலமுருகன் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் துணை சூப்பிரண்ட் செந்தில் குமார், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தோட்டத்திற்கு விரைந்து சென்று கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்த வாலிபரின் உடலையும், அந்த இளம் பெண்ணின் உடலையும் மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்தில் கிடந்த தடையங்களான மருந்து பாட்டில், தண்ணீர் பாட்டில், பூ மற்றும் உணவுப் பொட்டலங்களை காவல்துறையினர் கைப்பற்றினர். இது குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வந்தனர் இந்த விசாரணையில் இறந்தவர்கள் மைக்கேல் பாளையம் பகுதியில் தொழிலாளியான ஜீவா (32) என்பதும், அந்த இளம் பெண் அதே பகுதியில் வசித்து வந்த சகாயராஜ் மனைவி ஆலிஷா(30) என்பதும் தெரிய வந்தது.

ஆலிஷா வீட்டின் அருகே ஜீவா வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது. இருவரின் காதலும் அப்பகுதி முழுக்க தெரிந்ததால் அவமானத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. ஆலிஷாக்கு 13 வயதில் ஒரு மகன்உள்ளார். ஜீவாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் தெரிய வந்தது. இந்த நிலையில் ஆலிஷா விஷமருந்தை குடித்து தற்கொலை செய்துள்ளார். மேலும் அந்த வாலிபர் தனக்குத்தானே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்துள்ளார். கள்ளக்காதல் ஜோடி தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments