பல்லாவரத்தில் சமூகநீதி மாணவர் இயக்கம் நடத்தும் காந்தி படுகொலை பயங்கரவாத எதிர்ப்பு நாள் மாணவர் எழுச்சி கருத்தரங்கம்
பல்லாவரத்தில் சமூகநீதி மாணவர் இயக்கம் நடத்தும் காந்தி படுகொலை பயங்கரவாத எதிர்ப்பு நாள் மாணவர் எழுச்சி கருத்தரங்கம் சமூகநீதி மாணவர் இயக்கம் செங்கல்பட்டு மண்டல செயலாளர் ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி தலைவர் அண்ணன் ப.அப்துல் சமத், மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தாம்பரம் எம். யாக்கூப் எம்பி அவர்கள், தேசிய இளைஞர் அணி காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் சட்டப்பிரிவு மெளலவி ஆலிம் அல் புகாரி, திராவிடர் கழகத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் மாயவரம் ஜெ.அமீன், மனிதநேய மக்கள் கட்சி மாநில வழக்குரைஞர் அணி செயலாளர் எம்.முஜிபுர் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.தமிம் அன்சாரி ஆகியோர் சிறப்பு உரையாற்றினார்கள்.
மேலும் SMI செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் குல் முகமது முன்னிலை வகித்தார்கள் மேலும் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் எஸ்.கே .ஜாகிர் உசேன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எம்.அப்துல் ரஹீம்,தமுமுக மாவட்ட செயலாளர் பாருக் அஹமது,மாநில MTS பொருளாளர் ஆசிக் ஹமிது, மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி மாநில துணைச் செயலாளர் முகமது நயினார், மாநில விளையாட்டு அணி துணைச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ்,தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் முகம்மது ஜமீல், மாவட்ட துணைச் செயலாளர்கள் பம்மல் யூனுஸ், மன்சூர் அலிகான், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், சமூக நீதி மாணவர் இயக்க சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
இறுதியாக சமூக நீதி மாணவர் இயக்க செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பொருளாளர் சமீயுல்லா நன்றி உரையாற்றினார்கள்.
No comments