பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை..... பின்வாங்கியது விடாமுயற்சி

 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கும் நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் திரிஷா ஹீரோயின் ஆக நடிக்கும் நிலையில், நடிகை ரெஜினா, நடிகர் அர்ஜூன், நடிகர் ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் முதல் பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு விடாமுயற்சி படத்தின் டிரைலர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் நேற்று இரவு சில தவிர்க்க முடியாத காரணங்களால் பொங்கல் பண்டிகைக்கு படம் ரிலீஸ் ஆகாது என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் படம் ரிலீஸ் ஆகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அனைவருக்கும் புத்தாண்டு சிறக்க வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டுள்ளனர். இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments