செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த செல்லியம்மன் கோவில் அருங்குணத்தில் பம்மல் அன்னை தெரேசா மாற்றுத்திறனாளிகள் வெல்பேர் டிரஸ்ட் சார்பில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் சமபந்தி விருந்து மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி இயக்குனர் பம்மல் B.கவிதா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் செயல் திறன் நிபுணர் ஜி.கண்ணன், திரு. பாலாஜி 5வது வார்டு உறுப்பினர் அருங்குணம், மதுராந்தகம் என்.ஓ.அறக்கட்டளையின் என்.ஓ.பிரித்திவிராஜ், தாம்பரம் சாரதி நினைவு அறக்கட்டளை முதியோர் இல்லம் திரு.பவுல் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தலைவர் பம்மல் கலா, கௌரவ தலைவர் திரு.அருணகிரி , செயலாளர் எஸ்.தேவி மதுராந்தக கிளை செயலாளர்கள் பாஸ்கர், மாதவன், பாண்டியராஜன், செயற்குழு உறுப்பினர்கள் புஷ்பா மாதவன், வளர்மதி பாஸ்கர், ரமேஷ், குணசேகரன், மோகன், மோகனரங்கன், சௌந்தராஜன், கந்தன், ஜெயக்குமார், கணேஷ் மற்ற கிளை செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
0 Comments