தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக சூப்பர் ஸ்டார் திகழ்கிறார். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமூக அக்கறையுள்ள படமாக உருவான வேட்டையன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அமீர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் நிலையில், அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் சூட்டிங் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது கூலி படத்தின் சூட்டிங் காக நடிகர் ரஜினிகாந்த் தாய்லாந்து செல்கிறார். இதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு வந்த நிலையில் நிருபர்கள் அவரை சந்தித்தனர். அப்போது அவரிடம் தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்த கேட்டனர்.
அதற்கு ரஜினிகாந்த் என்னிடம் அரசியல் கேள்விகளை கேட்க வேண்டாம் என்று ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன் என்று கடுகடுத்தார். அதன் பிறகு கூலி படம் பற்றி பேசிய அவர் ஏற்கனவே 70% படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி 13ஆம் தேதி தொடங்க உள்ளது என்று கூறினார்.
0 Comments