புதுச்சேரியில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி நிறைவு நாள் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் வந்திருந்தார். இதையடுத்து அவர் கவர்னர் மற்றும் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்களை சந்தித்தார்.
அதன் பின் கோரிமேட்டில் உள்ள முதலமைச்சர் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து அங்குள்ள அப்பா பைத்தியம் சாமி கோவிலில், இணை மந்திரி சுவாமி தரிசனம் செய்தார். அப்போது முதலமைச்சர் தீபாராதனை காண்பித்து, மத்திய மந்திரிக்கு திருநீர் பூசி ஆசி வழங்கினார். அதன் பின் முதலமைச்சர் வீட்டில் அவர் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
0 Comments