ஒட்டன்சத்திரத்தில் விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பழனி கலால் உதவி இணை ஆணையர் பால்பாண்டி, கோட்டாட்சியர் கிஷான் குமார், நகராட்சி ஆணையாளர் ஸ்வேதா, கலால் தாசில்தார், வடிவேல் முருகன் நகரச் செயலாளர் ப.வெள்ளைச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வீ. கண்ணன், ஒன்றிய செயலாளர் எஸ். ஆர். கே. பாலு, ஆறுமுகம், காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கலால் டி.எஸ்.பி முருகன் மற்றும் காவல் துறையினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments