திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக கடந்த ஐந்தாண்டு காலம் சிறப்பாக பணி செய்தவர் உஷா ஜெயக்குமார். 30 ஆண்டு காலமாக வழங்கப்படாத குடிநீர் பிரச்சனையை சரி செய்து இணைப்பு கொடுத்தது, இரண்டு கோடி மதிப்பீட்டில் மின்சார தகன எரிமேடை,புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்,புதிய மூன்று அங்கன்வாடி கட்டிடங்கள் உள்ளிட்ட இதுவரை கிராம மக்களுக்கு போடப்படாத புதிய சாலைகள் என பல்வேறு புதிய திட்டப் பணிகளை செய்து பொதுமக்களுக்கு வசதிகளை செய்து கொடுத்தார்.
இதனை பாராட்டும் வகையில் ஐந்தாண்டு பதவி காலம் முடியும் தருணத்தில் வல்லூர் ஊராட்சி மன்ற பொதுமக்கள் இணைந்து சீர் வரிசைகளுடன் ஊர்வலமாக ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டிற்கு வந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர்.
ஐந்தாண்டு காலம் பதவி நிறைவு அடைந்ததை முன்னிட்டு பதவி நிறைவு வாழ்த்துக்களை பொதுமக்கள் சார்பில் தெரிவித்துக் கொண்டனர்.இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த கிராம பொதுமக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஜெயகுமார் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணமாக இருந்தது.
0 Comments