• Breaking News

    சீமான் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

     


    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள அவருடைய வீட்டினை பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் இன்று காலை 10 மணி அளவில் முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளனர். 

    இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன் பிறகு சீமான் வீட்டை முற்றுகையிட வருபவர்களை தெருமுனையிலேயே தடுத்து நிறுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் முன்னதாக பெரியார் பாலியல் இச்சை வரும்போது எல்லாம் தாய் மகள் சகோதரிகளுடன் உடலுறவு கொள்ளுங்கள் என்று கூறியதாக சீமான் சொன்னது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இதற்கு கண்டனம் தெரிவித்து பெரியார் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்திய நிலையில் அவருடைய வீட்டினையும் முற்றுகையிட்டனர். 

    ஆனால் சீமான் தன்னுடைய கருத்திலிருந்து பின்வாங்கப் போவது கிடையாது என்று தெளிவாக சொல்லிவிட்டார். இதன் காரணமாக தான் இன்று அவருடைய வீட்டை அவர்கள் முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளனர். மேலும் இதன் காரணமாகத்தான் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    No comments