ஈ.வெ.ரா., குறித்து சீமான் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும் அவரது கருத்துக்கு தாம் உடன்படுவதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறி இருந்தார். அண்மையில் இது குறித்து நிருபர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ஈ.வெ.ரா., பற்றி அவதூறு பேசுபவர்களின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிறேன் என்று விமர்சித்து இருந்தார்.
துரைமுருகனின் இந்த கருத்துக்கு அண்ணாமலையும் பதில் அளித்துவிட்டார். துரைமுருகனுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந் நிலையில் வேலூரில் நிருபர்களை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார். அப்போது அண்ணாமலை கருத்து பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு துரைமுருகன் கூறியதாவது; அண்ணாமலையின் நல்ல எண்ணத்துக்கு நன்றி. அவர் பெரும்பாலும் என்னை பற்றி பேச மாட்டார். அதனால் அவரை பற்றி பேச வேண்டாம்.
தமிழக அரசுடன் கவர்னர் ஆர்.என். ரவி முச்சந்தியில் சண்டை போடுவது போன்று போடுகிறார். கவர்னர் பதவிக்கான மாண்பு, மரியாதையை மறந்துவிட்டு சண்டை போடுகிறார். அரசியல்வாதி போல் செயல்படுவதை கவர்னர் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
0 Comments