தொப்பை என நினைத்த பெண்ணுக்கு ஸ்கேன் ரிப்போர்ட்டில் காந்திருந்த அதிர்ச்சி

 


நாகப்பட்டினத்தில் வசிக்கும் ஒரு பெண் அதிக தொப்பை இருந்ததால் வாக்கிங் சென்று தொப்பையை குறைக்க முயன்றார். ஆனால் 5 வருடங்களாக தொப்பை குறையாமல் அப்படியே இருந்தது. இதனால் அந்த பெண் வெளிபாளையம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்த போது அந்த பெண்ணின் கர்ப்பப்பை அருகே ஒரு கட்டி இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர்.

உடனே அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சைக்கு பிறகு வயிற்றில் இருந்த 11 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டது. ஆயிரத்தில் ஒருவருக்கு இது போன்ற பிரச்சனை வரும். அப்படி பிரச்சனை இருக்கும் பட்சத்தில் சிகிச்சை எடுக்க தவறக்கூடாது என மருத்துவர்கள் எச்சரித்தனர் .

Post a Comment

0 Comments