விபத்து ஏற்படுத்தும் சாலை..... விடியல் அரசு விமோசனம் தருமா..?
செங்கோட்டை - குற்றாலம் பிரதான சாலை முழுவதுமாக சேதமடைந்துள்ள நிலையில் மின்விளக்குகளும் தொடர்ச்சியாக இல்லை. அதிக மழைப்பொழிவுள்ள இப்பகுதியில் பகல் நேரத்தில் கூட சாலையில் உள்ள பள்ளங்கள் தெரிவதில்லை.
இரவில் சாலைகளில் ஆங்காங்கே சுற்றித்திரியும் மாடுகளும் எளிதில் கண்ணுக்கு புலப்படாத நிலையில் பெண்கள், குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வரும் பலரும் தொடர்ச்சியாக கீழே விழுந்து பலத்த காயமடைந்த வண்ணம் உள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட இச்சாலை திமுக அரசு பொறுப்பேற்று 4ஆண்டுகளாகியும் இதுவரை கவனிக்கப்படாமலே உள்ளது. ஒருவேளை இப்பகுதி எம்எல்ஏ எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்பதால் புறக்கணிக்கப்படுகிறதா என சந்தேகமும் எழுகிறது. உயிர்ப்பலி ஏற்படும் முன் விடியல் அரசு விமோசனம் தருமா?
No comments