முழு சங்கி போல செயல்படும் சீமான்..... நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நிர்வாகி அறிக்கை
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக கூறி சமீப காலமாக முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். வலதுசாரிகளின் வழிகாட்டுதலில் தமிழுக்கும் தமிழ் தேசியத்திற்கும் சீமான் துரோகம் செய்து வருவதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் அடிக்கடி நீங்கள் குருமூர்த்தியையும், கோபால்ஜியையும் சந்தித்து அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நமது தேசிய தலைவரையும், பெரியாரையும் எதிரெதிராக நிறுத்துவது தமிழ்நாட்டில் தமிழர் அரசியல் வளர்ச்சி பெறாமல் இருக்க சங்பரிவார் கும்பலின் சதித்திட்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது என ஜெகதீச பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். முழு சங்கி போல சீமான் செயல்படுவதாக காட்டமான அறிக்கையை வெளியிட்டு ஜெகதீச பாண்டியன் கட்சியில் இருந்து விலகி விட்டார்.
No comments