• Breaking News

    பல்லாவரத்தில் மறைமலை அடிகள் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள இளைய கலாம் அறிவியல் மையத்தால் நிகழ்ச்சி நடைபெற்றது


    செங்கல்பட்டு மாவட்டம்,பல்லாவரத்தில் உள்ள மறைமலை அடிகள் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள இளைய கலாம் அறிவியல் மையத்தால் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மாபெரும் அறிவியல் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது.இளைய கலாம் அறிவியல் மையம் 2021 ஆம் ஆண்டுகள் HCL Foundation & SEDT ஆல் ஆண்டு உருவாக்கப்பட்டது.

    இதில் வரையில் 20,000 மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்,  2024-2025  ஆண்டிற்கான இளைய கலாம் அறிவியல் திருவிழா  சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது, இதில் 68 க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் 150 மேற்பட்ட அறிவியல் மாதிரிகளை கொண்டு வந்து அவர்களின்  திறமைகளை வெளிப்படுத்தினர், அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக 7000 ரூபாய், இரண்டாம் பரிசாக ரூ.5,000, மூன்றாம் பரிசாக 3000 வழங்கி மாணவர்களை சிறப்பிக்கப்பட்டுள்ளனர், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி,ISRO Dr.இளங்கோவன், SEDT, HCL Foundation  மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,  கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினார்.

    No comments