பரந்தூருக்கு பறந்தார் தவெக தலைவர் விஜய்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று காஞ்சிபுரத்தில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்திக்கிறார். அதன்படி அங்குள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் பிற்பகல் 12 மணி முதல் மதியம் 1 மணிக்குள் காவல்துறையினர் பொதுமக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி கொடுத்துள்ளனர்.
அதன் பிறகு குறிப்பிடப்பட்ட கூட்டத்தை தவிர அங்கு யாரும் கூட கூடாது எனவும் காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை ஆரம்பித்த விஜய் பனையூரில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தின் போது தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட மாட்டாது என்று உறுதி கொடுத்தார்.
தற்போது அவருடைய வீட்டிலிருந்து நடிகர் விஜய் ஏகனாபுரம் புறப்பட்டார். இதைத்தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் வைத்து மட்டும்தான் விஜய் அரசியல் செய்து வருவதாக புகார்கள் எழுந்த நிலையில் தற்போது முதல் முறையாக அவர் கட்சி தொடங்கிய பிறகு களத்திற்குள் நேரடியாக வருகிறார். மேலும் இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
No comments