நான் ஏன் எழுந்து நின்றேன்.... மதுரை மாவட்ட ஆட்சியர் விளக்கம்

 


மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்களும், துணை முதலமைச்சரின் மகன் இன்பநதி மற்றும் அவரது நண்பர்கள் பங்கேற்றனர்.மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்களும், துணை முதலமைச்சரின் மகன் இன்பநதி மற்றும் அவரது நண்பர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது இன்பநிதி மற்றும் அவரது நண்பர்கள் அமர்வதற்காக மாவட்ட ஆட்சியரை எழுந்து நிற்க கூறியதாக செய்திகள் பரவியது.

அதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா கூறியதாவது, திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. நான் எழுந்து நின்றது பற்றி பரவும் செய்திகள் தவறானது. எதுவும் தெரியாமல் ஆளாளுக்கு புகைப்படத்தை வைத்து பேசுறாங்க. அமைச்சர் எழுந்து நின்று பேசினார். அப்போது விதிமுறையின் படி மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் நானும் எழுந்து நின்றேன். அவ்வளவுதான். என்னை யாரும் எழுந்து நிற்க சொல்லவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

Post a Comment

0 Comments