பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் சிறப்பு விற்பனை

 


சென்னை கோயம்பேடு வளாகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை சந்தை தொடங்கியது. வரும் 16-ஆம் தேதி வரை சிறப்பு விற்பனை சந்தை நடைபெறும் நிலையில், கரும்பு, மஞ்சள், இஞ்சி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.

வெளியூரில் இருந்துவரும் வியாபாரிகள் வாகனங்களை நிறுத்துவதற்காக தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும் என்றும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் விற்பனை செய்யக்கூடாது எனவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments