இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த பிசிசிஐ

 


பிசிசிஐ கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதிமுறைகளை வெளியிட்டது. உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து வீரர்களும் கட்டாயம் விளையாட வேண்டும். போட்டிகளின் போது அனைத்து வீரர்களும் அணியுடன் ஒன்றாக பயணிக்க வேண்டும். தனியாக பயணம் செய்யக்கூடாது. குறிப்பிட்ட அளவு உடைமைகளையே கொண்டு வரவேண்டும். அதைவிட அதிகமாக இருக்கும் பட்சத்தில் வீரரே அதன் செலவை ஏற்க வேண்டும்.

மேலாளர், சமையல் உதவியாளர் உள்ளிட்ட தனிப்பட்ட நபர்களை வீரர்கள் உடன் அழைத்து வரக்கூடாது. பயிற்சியை முடித்துவிட்டு சீக்கிரம் கிளம்பக்கூடாது. அனைத்து வீரர்களுடனும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும். போட்டிகள் நடைபெறும் காலத்தில் தனிப்பட்ட விளம்பர படப்பிடிப்புகள் உள்ளிட்டவை நடத்த அனுமதி இல்லை. விதிமுறைகளில் தளர்வுகள் ஏதும் வேண்டும் எனில் பயிற்சியாளர் கேப்டன் தேர்வுக்குழு உள்ளிட்டோரியின் அனுமதி பெற வேண்டும்.

Post a Comment

0 Comments