மீஞ்சூர் ஒன்றியம் நெய்த வாயல் ஊராட்சி மவுத்தும்பேடு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடம் திறப்பு நடைபெற்றது


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட நெய்த வாயல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூபாய் 15 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கடந்த ஆண்டு கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது திறப்பு விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாலன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ராஜா .வார்டு உறுப்பினர் சரளா கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகிததனர்.

 ஊராட்சி மன்ற தலைவர் பாலன் கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று அங்கன்வாடி பணியாளர் துளசி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இன் திறப்பு விழாவில் கிராம நிர்வாகிகள் அப்பாவு ,சிங்காரம், பிரசாத், ராஜேந்திரன் ,கேசவன், ரவிக்குமார் ,பார்த்திபன், நந்தா, கலையரசன், பழனி,சரன்ராஜ்,மகளிர் அணி மஞ்சுளா, லட்சுமி, சுமதி, சகிலா, அன்னம்மாள் ,அருணா, தமிழ்ச்செல்வி மற்றும் இளைஞர்கள்,மகளிர், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments