இபிஎஸ்-ன் சூறாவளி சுற்றுப்பயணம் அறிவித்த சில நிமிடங்களிலேயே ஒத்திவைப்பு
வருகிற 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு அரசியல் கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகிறது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகமும் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
234 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் வருகிற 31ஆம் தேதி கோயம்புத்தூரில் தொடங்கும் என எஸ்பி வேலுமணி அறிவித்தார். ஆனால் சில நிமிடங்களில் அதே மேடையில் வைத்து சுற்றுப்பயணம் 10 நாட்கள் ஒத்திவைக்கப்படுவதாக புதியதாக அறிவித்தார்.
No comments