• Breaking News

    ஆலங்குளத்தில் ஸ்கேட்டிங் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி மாணவர்கள் நடத்தினர்


    ஆலங்குளத்தில் ஸ்கேட்டிங் மூலம் இடைகால் ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

    ஆலங்குளம் அருகேயுள்ள இடைகால் ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி ஸ்கேட்டிங் மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆலங்குளத்தில் நேற்று நடைபெற்றது. காவல் துறை துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) மீனாட்சி சுந்தரம்,காவல் ஆய்வாளர் காசிப்பாண்டியன் தலைமை வகித்தனர். பள்ளி நிறுவனர் முருகன், முதல்வர் பிரவின் குமார் முன்னிலை வகித்தனர்.

    மாணவர்கள் 21 பேர் சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்களை கையில்ஏந்தி, பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வரை ஸ்கேட்டிங் மூலம் சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில்சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி,  சொரிமுத்து, மகேந்திரன். பயற்சியாளர்  முத்துகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தாளாளர் புனிதா செல்வி, செயலாளர்கள் ஆகாஷ் ஆஷிஷ் லிங் ஆகியோர் நன்றி கூறினர்.

    No comments