ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் காத்தபுரத்தில் ஐந்தாம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.அந்த பள்ளியில் சுமார் 68 மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.ஊரிலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரம் வரையில் எந்த அரசு நடுநிலைப் பள்ளியும் கிடையாது.
காத்தபுரத்தில் 5 வரை படிக்கின்ற மாணவ மாணவியர்கள் 10 கிலோமீட்டர் தூரம் உள்ள முக்கூடல் பள்ளிகளோ அல்லது ஆலங்குளத்தில் இருக்கிற பள்ளியிலோ சேர்ந்து தான் பயில வேண்டிய சூழ்நிலை உள்ளது.மேலும் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளூரில் பள்ளிக்கூடம் இருப்பதால் நிறைய மாணவ மாணவியர்களை பெற்றோர்கள் அருகாமையில் இருக்கிற ஆலங்குளத்தில் இருக்கிற ஆங்கில வழிக் கல்வியில் குழந்தைகளை சேர்த்து விடுகிறார்கள்.
மேலும் இப்பகுதி பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதியாகும் பீடி சுற்றும் தொழிலை மட்டுமே நம்பி இருக்கிற பகுதி என்பதால் குழந்தைகளை மேல் படிப்பு படிக்க வைப்பதற்கு பெற்றோர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
ஆகையால் அமைச்சர் அவர்கள் காத்தபுரத்தில் இயங்கி வருகிற ஆரம்ப ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தரவேண்டும் என்கிற கோரிக்கை மனுவை வழங்கினார். அமைச்சர் அவர்களும் ஆய்வு செய்து பள்ளியை தரம் உயர்த்துவற்கான ஏற்பாடுகளை செய்வதாக சொன்னார்கள்.
நிகழ்வின் போது மாவட்ட அவை தலைவர் சுந்தர மகாலிங்கம் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை துணை கடையநல்லூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் காசி தர்மம் துரை மாவட்ட பிரதி ஸ்டீபன் சத்யராஜ் ஆலங்குளம் ஒன்றிய துணை பெருந்தலைவர் செல்வ கொடி ராஜாமணி ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால் கழக வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
0 Comments