நடிகர் ரஜினிகாந்தை திடீரென சந்தித்தது ஏன்...? ஓபிஎஸ் விளக்கம்

 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரை நேற்று புத்தாண்டு தினத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவருடைய இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து பேசினார். அதாவது நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்து புத்தாண்டு வாழ்த்து கூறியதோடு அவரிடம் வாழ்த்து பெற்றதாகவும் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டு அறிந்ததாகவும் தகவல் வெளியானது.

அதோடு‌ 2026 ஆம் ஆண்டு தேர்தல் மற்றும் பாஜகவுடன் கூட்டணி என்று அரசியல் பற்றி பேசியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது ஏன் என்பது குறித்து ஓபிஎஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,‌ புத்தாண்டு பண்டிகை என்பதால் வாழ்த்து கூறுவதற்காக மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தேன். மேலும் அரசியல் ரீதியான விவாதம் நடைபெறவில்லை என்பதை தெளிவாக கூறிக் கொள்கிறேன் என்று கூறினார்.

Post a Comment

0 Comments