• Breaking News

    மகன் உயிரிழந்த துக்கம் தாங்காமல் தாயும் மயங்கி விழுந்து உயிரிழப்பு

     


    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடலில் நடராஜன்- கலைமணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது நான்காவது மகன் சுரேஷ் பொங்கல் விடுமுறையில் சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சுரேஷ் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலை இறுதி சடங்கு செய்வதற்காக உறவினர்கள் முக்கூடலுக்கு கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் மகன் இருந்த தகவலை கேட்ட கலைமணி துக்கம் தாங்காமல் கதறி அழுதார். இதனால் மயங்கி விழுந்து கலைமணியும் உயிரிழந்தார். தாய் மகன் இருவரது உடல்களையும் உறவினர்கள் ஒரே இறுதி வாகனத்தில் கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    No comments