• Breaking News

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்பு விழா..... இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு

     



    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப், வரும் 20ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். பதவிக்காலம் முடிவடையும் அதிபர் ஜோ பைடன், விழாவில் கலந்து கொண்டு அதிகாரத்தை அவரிடம் ஒப்படைப்பார். இவ்விழாவில் பல நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு டிரம்ப் உரையாற்றுவார்.

    பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து இந்தியா சார்பில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். பதவியேற்பு விழா முடிந்ததும், புது நிர்வாகத்தினரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஜெய்சங்கர் ஆலோசனை நடத்துவார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    No comments