திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே சில்வார்பட்டி பஞ்சாயத்து அய்யம்பட்டி பகுதியில் உள்ள கிணற்றில் திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் படிக்கும் சிவகங்கை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் பிரகாஷ் என்பவர் குளிக்கும்போது நீரில் மூழ்கி பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பிரகாஷின் உடலை கிணற்றிலிருந்து மீட்டனர்.இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments