• Breaking News

    குத்தாலம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் “உங்களை தேடி உங்கள் ஊர்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்கள்


    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்திற்குட்பட்ட வழுவூர் ஊராட்சியில் குடியிருப்பு வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் பிரித்து வழங்கப்படும் பணிகள்,வழுவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கப்பூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்,கப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் “உங்களை தேடி உங்கள் ஊர்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்கள்.

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் வழுவூர் ஊராட்சியில் குடியிருப்பு வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தூய்மை பணியாளர்களுக்கு பிரித்து வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். தொடர்ந்து, வழுவூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு, உணவின் தரத்தினை ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்கள்.

    அதனைத் தொடர்ந்து, கப்பூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளுடன் கோரிக்கைகளை கேட்டறிந்தார்கள். பின்னர்,கப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு,பள்ளி குழந்தைகளின் கற்றல் திறனை ஆய்வு செய்தார்.

    இவ்வாய்வின்போது,தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கீதா, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் சீனிவாசன்,மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கணியன்,  குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷோபனா,புவனேஷ்வரி, குத்தாலம் வட்டாட்சியர் சத்யபாமா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    No comments