நாகை அருகே மணலூர் அருள்மிகு வீரமா காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த 64- மணலூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு வீரமா காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. நூதனமான திருக்கோவிலும், கற்சிலா விக்ரஹங்களும் புதிதாக அமைத்து இன்று கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
கும்பாபிஷேகம் விழா கடந்த 23 ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி நடைப்பெற்று முதல்கால யாகசாலை பூஜைகள் நிறைவுப்பெற்று தீபாராதனை நடைப்பெற்றது. இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுப்பெற்று பூர்ணாஹூதி மஹா தீபாரதனை நடைப்பெற்றது.
தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைப்பெற்றது. சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க ஆலய கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது அதனை தொடர்ந்து வீரமா காளியம்மன், முருகன், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள், பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பெண் பக்தர்கள் பக்தி பரவசத்தில் சாமி ஆடி வழிப்பட்டனர்.
மக்கள் நேரம் எடிட்டர்
நாகை மாவட்ட நிருபர்
ஜீ.சக்கரவர்த்தி
விளம்பர தொடர்புக்கு
9788341834
No comments