தமிழகத்தில் இன்று பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நாளை மாட்டுப்பொங்கல். திருவள்ளுவர் தினமும் கூட. நாளை திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அரசு. திருவள்ளுவர் கள்ளுண்ணாமையை வலியுறுத்தியவர். இதன் காரணமாக நாளை திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.எனவே நாளை தடையை மீறி டாஸ்மாக் கடைகளை திறந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து ஜனவரி 26 ஆம் தேதியும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
0 Comments